ஆகாயம்

ஈசனின் படைப்பான
ஐம்பூதங்கள்  நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் ஆகும்.
இதில் வெளியினை அதாவது ஆகாயம் பற்றி பார்க்கலாம்.

ஆகாயம் எனில் வெளி. ஈசன்  ஐம்பூதங்களாய் சஞ்சரிக்கின்றார் அதற்குரிய ஆலயங்களும் உள்ளன. இதில் ஆகாயத்துக்கானது(வெளி) தில்லை என்ற சிதம்பரம்.

சிதம்பரம் என்பதற்கு பொருள்:
"சித்" என்றால் மனம்.
"அம்பரம்" என்றால் பெருவெளி.
மனம் என்ற பெருவெளியில் இறை
வனை நிறுத்துவதையே சிதம்பரம் என்கிற கருத்து உணர்த்துகிறது.

சிதம்பர ரகசியம் என்பது, "ஏதுமில்லாதது” ஏதுமில்லாத
இடத்தில்  (பெருவெளியில்)
எல்லாமே இருக்கிறது என்பதையே சிதம்பரம் உணர்த்துகிறது.

"ஏதுமில்லாத" வெளியில் ஈசன் மறைந்திருக்கிறான். ஏதுமில்லாமையை அவன் தரித்திருக்கிறான்.

இறைவனை "மறையுமாய்  மறையின் பொருளுமாய்" வந்தவன் என மாணிக்க வாசகர் திருவாசகத்தில் குறிப் பிடுகிறார். இதன் பொருள் மறைகளை ஓதியதோடு அவற்றின் அர்த்தங்களாகவும் இருப்பவன் ஈசன் என்பதாகும். சிதம்பரனாய் மறைந்திருந்து
திருவிளையாடல்களைச் செய்பவன் ஈசனே என்பது இதன் 'மறை' பொருள்.

வெளி என்பது விரிந்தது, எல்லைகள் இல்லாது. மனித மனமும் இந்த வெளியைப் போல விரிந்து கொண்டே இருக்கக்கூடியது.  ஐம்பூதங்களில் தலைமை பூதமாக இருக்கும்
வெளிதான் மற்ற நான்கு பூதங்களையும் கட்டுப்படுத்துகின்றது.

காற்றில் தோன்றும் வெப்பமும், கடலில் தோன்றும் புயலும், நிலத்தில்
தோன்றும் வெடிப்பும், வெளியால் தீர்மானிக்கப்படுபவை.

பூமிக்கு வெளியில் சென்று விட்டால் திசைகள் இல்லை; காலமும்  இல்லை; தொலை வுகள் இல்லை; அண்மையும் இல்லை; ஆகவே மனமும் வெளியும் ஒன்றுதான். 

ஆதியும் அந்தமும் இல்லாத ஈசன்தான் வெளி.
எனவே வெளியாய் உள்ள தில்லை அம்பலத்தான் ஆன ஆதியும் அந்தமுமில்லாத ஈசனை வணங்கி அவனது அருளைப் பெறுவோம்.

ஓம் ஜெய் குருவே துணை.

Comments

Popular posts from this blog

108 Entire Universe

Entire Galaxy is 108